24 Tamil News
சினிமா

விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' டிரெய்லர் வெளியானது

N.F.Rifka

admin

விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' டிரெய்லர் வெளியானது

எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி உள்ளது. மலேசியாவில் நடந்த இசை வெளியீட்டு விழாவில், அனிருத் மேடையில் பாடிய 'ராவண மவன்டா' பாடலை யூடியூப்பில் படக்குழு வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் 69-வது மற்றும் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (03) மாலை 6.45 மணியளவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் அதிரடிப் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லரில், விஜய்யின் அனல் பறக்கும் வசனங்கள் மற்றும் சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
"மக்களுக்கான தலைவன்" என்ற தொனியில் விஜய்யின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக டிரெய்லர் மூலம் அறியமுடிகிறது.